Breaking
Sun. Dec 22nd, 2024

குவைத்தில் ஓட்டுனர் உரிமம்விண்ணப்பிக்க  தகுதியானவர்கள்!!!

குவைத்தில் சமீபத்திய விதிகளின்படி யார் யாரெல்லாம் ஓட்டுனர் உரிமம் பெற தகுதியானவர்கள் என்று பின்வருமாறு கான்போம்.

அ, பல்கலைக்கழக பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும்.
ஆ, வின்னப்பதாரரின் மாத வருமானம் குறைந்தது 400KD ஆக இருக்கவேண்டும்
இ, குறைந்தபட்சம் இரண்டுவருடங்கள் குவைத்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.

மேலும் கீலே குறிப்பிடும் சிலபிரிவினருக்கு சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன
1, தனியார், மற்றும் அரசு நிறுவன டிரைவர்கள், அரசு அதிகாரிகள்
2, வீட்டு டிரைவர்கள்(குவைத்தி வீட்டு டிரைவர்கள்)
3, ஆலோசகர்கள், நீதிபதிகள், சட்டவல்லுனர்கள், வக்கீல்கள்
4, மருத்துவர்கள், மருந்தகம் நடத்துபவர்கள்
5,பல்கலைக்கழக, மற்றும் கல்லூரிப்பேராசிரியர்கள், உயர்கல்வி ஆசிரியர்கள்.
6, பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர்கள்.
7, குவைத் ஆன்களைத் திருமனம் செய்த அயல்நாட்டுப்பெண்கள்
8, குவைத் ஆன்களால் விவாகரத்து ஆன மற்றும் கனவனை(குவைத்தி) இழந்த அயல்நாட்டுப்பென்கள்.
9 குவைத் பென்னை திருமனம் முடித்த அயல்நாட்டவர் மற்றும் அவர்களது குழந்தைகள்.
10, பள்ளி இமாம்கள்
11, கல்வி அமைச்சகத்தில் வேலைபார்க்கும் நூலக ஊழியர்கள்
12, அரசு மற்றும் தனியார் துரைகளில் வேலைபார்க்கும் செவிலியர்கள்(நர்ஸ்)
13, அரசு துரைகளில் வேலை பார்க்கும் எக்ஸ்ரே மற்றும் ஆய்வக டெக்னீசியன்கள்.
14, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஏனைய ஊடகத்துரை பனியாளர்
15, பல்கலைக்கழக பட்டமுள்ள இயக்குனர்கள், கணக்காளர்கள்.
16, விளையாட்டுப்பயிற்ச்சியாளர்கள் விளையாட்டு வீரர்கள்.
17, விமான ஓட்டிகள் மற்றும் உதவி விமான ஓட்டிகள்.
18, புலம்பெயர்ந்து வாழும் இல்லத்தரசிகள், அவர்களின் கனவன் மற்றும் குழந்தைகள்
19, குவைத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலுகின்ற மானவர்கள்.
20, நிறுவன பிரதிநிதிகள் (மந்தூப்)
21, ஆயில் நிறுவனங்களில் வேலைபார்க்கும் வல்லுனர்கள்(டெக்னீசியன்ஸ்)
22, ஆலோசகர்கள் (மேலாண்மை, பொருளாதாரம், வணிகம், விவசாயம், சட்டம், கணினி, நிதி, உணவு, தொழில்நுட்பம்) அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்கள் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
23, தூதரக உறுப்பினர்கள்.
24, பாதுகாப்பு அட்டை வைத்திருக்கும் பது குவைத்திகள்.
25, பல்கலைக்கழக பட்டமுள்ள அரசுத்துரை ஆராய்ச்சியாளர்கள்.
26, பல்கலைக்கழக பட்டமுள்ள அரசுத்துரை மொழிபெயர்ப்பாளர்கள்.

இவர்களில் மேலே குறிப்பிட்ட 1, 2, 7, 8, 9, 10, 11, 12, 13, 16, 18, 19, 20, 21, 23, 24 ஆகிய பிரிவுகளில் உள்ள மக்களுக்கு பல்கலைக்கழக பட்டம் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும்

இவர்களில் 3, 4, 5, 6, 14, 15, 17, 22, 25, 26 ஆகிய பிரிவுகளில் உள்ள மக்களுக்கு சம்பளம் மற்றும் இரண்டான்டு வாழ்நாள், போன்றவைகளிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

Related Post