Breaking
Tue. Mar 18th, 2025

வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான பணிப் பெண்கள் சிலர், குவைத் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.

இன்று (13) காலை 06.50 அளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 80 பெண்களே இவ்வாறு வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டினால், மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை இம் மாத இறுதிக்குள் மேலும் சில பணிப் பெண்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

By

Related Post