Breaking
Sun. Dec 22nd, 2024

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 9 பேர் பலியாகினர். 23 பேர் காயம் அடைந்தனர்.

குவைத் தென் பகுதியில் 15 கி.மீட்டர் தொலைவில் பர்வானியா என்ற இடத்தில் புறநகர் உள்ளது. அங்கு வெளிநாடுகளில் இருந்து சென்று குடும்பத்துடன் தொழிலாளர்கள் பலர் தங்கியுள்ளனர்.

அவர்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு வீட்டில் பிடித்த தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். அவர்களில் 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.

இவர்கள் தவிர 23 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் தீயணைப்பு படை வீரரும் அடங்குவர். இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை.

By

Related Post