-ஊடகப்பிரிவு-
உரிமைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்று கூறி பாராளுமன்றம் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் இந்த மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சரின் இணைப்பு செயலாளரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லா இப்படிப்பட்டவர்களினால் மன்னார் நகர சபைக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கடலுக்குள் போடுவதற்கு சமமானது என்றும் கூறினார்.
மன்னார் நகர சபைக்கு ஜக்கிய தேசிய கட்சி சார்பில் பெற்றா மற்றும் பெரியக்கடை வேட்பாளராக போட்டியிடும் ஓய்வு பெற்றஅரச உத்தியோகஸ்தரும், பிரபல உதைப்பந்தாட்ட வீரருமான என்ரண் பிகிறாடோவின் கட்சி காரியலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுககையில் மேற்கண்டவாறு கூறினார்.
வைத்தியர் மகேந்திரன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிழ்வில் மேலும் இர்ஷாத் றஹ்மத்துல்லா உரையாற்றுகையில்-
மன்னார் நகர சபையினை பொறுத்தவரையில் மக்களுக்கு பணியாற்றுவதற்கு பாரிய பொறுப்பிருக்கின்றது. ஆனால் கடந்த ஆட்சியில் மக்கள் நன்மை அடையும் எந்த திட்டத்தினையும் செய்யவில்லை. மத்திய அரசில் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு உரிமை போராட்டமே எமது மக்களின் தேவையென்று அம்மக்களது அபிவிருத்திகளை புறந்தள்ளி செயற்பட்டனர். அவ்வாறு இருந்த போதும் நகர சபைக்குள் அபிவிருத்தியினை கொண்டுவர அமைச்சர் றிசாத் பதியுதீன் பெரும் முயற்சிகளை செய்த போது தமிழ் கூட்டமைப்பினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்திலும், தனியார் தொலைக்காட்சிகளிலும் தோன்றி அதனை தடுத்துவந்தார். பகிரங்கமாக இந்த அபிவிருத்திகளை மன்னாருக்கு கொண்டுவருவதை நான்தான் தடுத்தேன் என்றும் கூறிவருகின்றார்.
பாராளுமன்றத்துக்குள்ளும், ஜனாதிபதியிடத்திலும் ஒன்றாக அமர்ந்து தமது தேவைகளை அனுபவித்துவரும் ,இவர்கள் இந்த மக்களுக்கு செய்துள்ள துரோகத்தனத்தை தமிழ் மக்களாகிய நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் .யுத்தத்தால் அனைத்தையும இழந்து போன தமிழ் பேசும் வட புல மக்கள் அதனை மீள பெற்றுக் கொள்ள சந்தர்ப்பர்ங்கள் வந்த பேதெல்லாம், அவர்களது நியாய பத்திரங்களை மட்டும் சரி செய்து கொண்டு இந்தமக்களை ஏமாற்றிவந்துள்ளனர். இன்று அவர்களது கூட்டுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் இதற்கு போதுமானது, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இதனைவெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த மாவட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரது வேலை எமது அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களையும்,அபாண்டங்களையும் சுமத்துவது தான் அதனை தவிர வேறு எந்த வேலையும் அவருக்கு இல்லை,எமது அமைச்சர் முழு நேர அரசியல் வாதி,ஆனால் இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒரு வியாபாரி,இவர் இதில் தான் கவனமாக இருக்கின்றார்.அதனால் தான் இவருக்கு வறிய மக்களது வலிகளின் வேதனைகள் உணர்வதில்லை.
மன்னார் நகர சபையின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் இந்த நகரை அழகு படுத்த தவறினர்.கட்டாக்காலிகள் படுத்துறங்கும் நகரமாகவும்,இங்குள்ள மக்கள் பின்தங்கிய மக்களாகவும் இருப்பதை கருத்தில் கொண்டு செயற்பட்டனர்.ஆனால் மக்கள் அவ்வாறு அல்ல என அவர்கள் மறந்துவிட்டனர்.இதனால் தான் இன்று ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் இந்த நகரை ஆழ வேண்டும் என்று தீர்மானித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,இந்த மண்ணின் மகனுமான அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது பற்றுகொண்டு எமது அமைச்சரின் கரங்களை பலப்படுத்தி மன்னாரை அழகிய நகரமாக மாற்ற அணி அணியாக ஒன்று திரண்டு வருகின்றனர்.
மன்னார் நகர சபை உள்ளிட்ட பல சபைகளை கைப்பற்றும் வியூகத்தை எமது அமைச்சர் வகுத்துள்ளார்.ஜக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து யாணை சின்னத்தில் இம்முறை வன்னி மாவட்டத்தில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்திய பேச்சுக்களினை அடுத்து பிரதமர் வன்னியில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து கேட்பதற்கான முடிவை அறிவித்தார்.
இதன் மூலம் இந்த மக்கள் முதலாவது வெற்றியினை அடைந்துவிட்டனர்.ஜக்கிய தேசிய கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் உதவியும் இந்த தேர்தல் வெற்றியின் பின்னர் கிடைக்கவுள்ளது. தற்போதும் கிடைத்தும் வருகின்றது. இதற்கு நீங்கள் சாட்சியாகும். மன்னார் கச்சேரியினை பாருங்கள், அதே போல் புகையிரத சேவைகள், மதவாச்சி – மன்னார் பாதைகள், சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணத்துக்கு இலகு பயணம் என்பவைகளை இங்கு கொண்டுவந்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன். ஆனால் எதையும் மக்களுக்கு செய்யாது வெறுமனே ஊடகங்களின் விளம்பரக்காரர்களாக இருக்கும் இந்த மக்கள் பிரதிநிதிகள், இதனை மறைத்து அபாண்டங்களையும்,பொய்களையும் அவிழ்த்துவிட்டு மக்கள் மத்தியில் தங்களை ஹீரோக்களாக காட்டும் அசிங்கத்தை செய்கின்றார்கள். இவர்களுக்கு பெப்ரவரி 10 ஆம் திகதி நீங்கள் நல்ல பாடத்தை புகட்ட வேண்டும்.
எமது இந்த வேட்பளார் நேர்மையானவர்,மக்களால் விரும்பப்படுகின்ற ஒருவர்,அரச சேவையில் நல்ல முறையில் பணியாற்றிவர்,நிர்வாகம் தெரிந்தவர் இவர் போன்ற அனுபவமும்,அறிவும் கொண்டவர்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வருகின்ற போது,அதிகமான அபிவிருத்திகள் உங்களை வந்து சேரும்,நீங்கள் ஒவ்வொருவரும் எடுத்துள்ள சபதம் அன்ரன் அய்யா அவர்களை வெற்றி பெறச் செய்வது.அது நிறைவேறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் இர்ஷாத் றஹ்மத்துல்லா இதன் போது கூறினார்.
இதன் போது மன்னார் நகர சபை வேட்பாளர் அன்ரண் பிகிறாடோ, வைத்தியர் மகேந்திரனும் உரையாற்றினார்.