Breaking
Fri. Nov 15th, 2024

கூட்டு அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்றைய தினம் மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

இன்று கூட்டாக இணைந்து ஆட்சி நடத்தும் தரப்பினர், நாட்டை அபிவிருத்தி செய்ததன் பின்னர் பிரிந்து சென்றால் பிரச்சினையில்லை.

ஏழு கூட்டுக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கம் அமைத்த காலங்களும் காணப்பட்டது. இன்று இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய சந்தர்ப்பம் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும்.

எந்த அசராங்கம் இருந்தாலும் மக்களுக்கு சேவையாற்றுவதே முக்கியமானது. மக்களுக்கு சேவையாற்றுவது மிகவும் அவசியமானது.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அரசாங்கங்களின் நோக்கமாக அமைய வேண்டுமென சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

By

Related Post