Breaking
Mon. Dec 23rd, 2024

கூல் ட்ரிங்க்ஸ் அல்லது சாஃப்ட் ட்ரிங்க்ஸ் என கூறப்படும் சோடா கலப்பு அதிகமாக இருக்கும் பானங்களை விரும்பி பருகாதவர் யாருமில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று தெரியாது நாம் இதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். கூல் ட்ரிங்க்ஸில் கலக்கப்படும் நச்சுக்களின் தன்மையும், அது நாம் வீடு துடைக்க உபயோகப்படுத்தும் இரசாயனதிற்கு ஈடாக இருப்பதையும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு நாம் கண்முன்னே நிகழ்ந்த உண்மை. ஆயினும் நாம் அதை மறந்து செயல்பட்டு வருகிறோம்.

கோடைக்காலம் தொடங்க போகிறது கண்டிப்பாக நாம், இளநீர், சர்பத், பதனி போன்ற இயற்கை பானங்களை பருகாமல் கூல் ட்ரிங்க்ஸ் தான் குடிப்போம் என்று அடம்பிடிக்க போவது தெரிந்த விஷயம் தான் அதற்கு முன்பு இதை படித்து விட்டு, உங்கள் வாழ்நாளை நீங்களே முடிவு செய்துக்கொண்டு அதன் பிறகு கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில்களில் கை வையுங்கள்…….

கொழுப்பு;

சோடா கலந்த கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதனால் எக்கச்சக்கமாக, உடல் முழுதும் கொழுப்பு கூடுகிறது. இதை நீங்கள் உங்கள் நண்பர்கள் மத்தியிலேயே கூட கண்டிருக்கலாம். ஒரு சிலர் தினசரி கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள், அவர்களின் உடல் எடை எண்ணெய் உணவுகள் சாப்பிடுபவர்களை விட அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் சோடாவில் இருக்கும் நச்சுக்கள் தான் என்கின்றனர். கார்மல்

புற்றுநோய் (Caramel Cancer);

கூல் ட்ரிங்க்ஸில் வண்ணம் சேர்ப்பதற்காக மெத்திலிமிடாஜோல் (Methylimidazole) என்னும் இரசாயனம் கலக்கப்படுகிறது, இது விலங்குகளுக்கு ஏற்படும் புற்றுநோயில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறன இரசாயன கலப்புகளினால் தயாரிக்கப்படும் கூல் ட்ரிங்க்ஸ் தான் நம் அனைவரின் விருப்பமான பானமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது.

சருமத்தன்மை மாற்றம்;

கூல் ட்ரிங்க்ஸ்களில் அதன் வாழ்நாளை நீட்டிக்க பாஸ்ஃபேட் மற்றும் பாஸ்ஃபோரிக் அமிலங்கள் சேர்க்கப்படுகின்றன, இவை கூல் ட்ரிங்க்ஸ் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க உதவுகிறது. ஆனால், இந்த கலவைகள் நமது சருமத் தன்மையை பாதிக்கிறது. தசைகளின் வலுவை குறைக்கிறது. இதனால், சீக்கிரமாகவே சருமம் முதிர்ச்சியான தோற்றமடைந்துவிடும்.

ஈறு பிரச்சனை;

கூல் ட்ரிங்க்ஸில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை மற்றும் அமிலங்களின் தன்மையினால் நமக்கு ஈறு மற்றும் பற்பசை பிரச்சனைகள் வருகின்றன. இதனால் நமது பற்கள் தனது வலுவை இழக்கிறது.

காஃப்பின்;

நிறைய சோடா கலப்புடைய கூல் ட்ரிங்க்ஸ்களில் காஃப்பினின் கலப்புகள் இருக்கிறது, இதன் காரணமாக புற்றுநோய், மார்பக கட்டிகள், இரத்த அழுத்தம், சீரற்ற இதயத்துடிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.

ஆண்மை;

நாம் குடிக்கும் அனைத்து வகை குளிர் பானங்களிலும் பைசெப்ஃனால்-ஏ எனப்படும் ரசாயன பூச்சு தடவி செய்யப்படுகிறது, இது ஆண்களின் ஆண்மையை பாதிக்கும் தன்மையுடையதாகும்……!

Related Post