Breaking
Mon. Dec 23rd, 2024
யாழ்.குடாநாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல யாழ்.நீதிமன்றில் ஆஜராகி உள்ளார்.

லலித், குகன் ஆகிய இருவரும் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி யாழ்.புத்தூர் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் லலித், குகன் ஆகியோர் உயிருடன் உள்ளனர் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்ம்புக்வெல்ல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

இதனையடுத்து லலித், குகன் ஆகியோரின் உறவினர்களால் யாழ்.நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்தில் ஆஐராகுமாறு யாழ்.நீதி மன்றம் பணித்திருந்தது. எனினும், அவர் மன்றில் ஆஐராகாத நிலையில் அடுத்தகட்டம் பிடியாணை பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையில் இன்று(3) காலை மேற்படி வழக்கில் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆஐராகியுள்ளார்.

By

Related Post