Breaking
Tue. Mar 18th, 2025

இந்தோனேசியாவில் கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில், நேற்று (13) சிக்கன் சாப்பிடும் போட்டி ஒன்றை சிக்கன் உணவகமான கே.எப்.சி என்று அழைக்கப்படும் கெண்டகி பிரைட் சிக்கன் நடத்தியது.

இந்த போட்டியில் பங்கேற்று கே.எப்.சி சிக்கனை அதிகமாக சாப்பிட்ட 3 நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நபர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது, இதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 45 வயதான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அந்த நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

By

Related Post