Breaking
Mon. Dec 23rd, 2024

கைத்துப்பாக்கியுடன் செல்பி புகைப்படம் எடுத்த ரஷ்ய பெண்ணின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் வெரோனிகா (21). செல்பி பிரியரான அவர் விதவித மான கோணங்களில் செல்பி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பாதுகாவலர் விட்டுச் சென்ற கைத்துப்பாக்கியை எடுத்த வெரோனியா அதனுடன் செல்பி புகைப்படம் எடுத்தார்.

அப்போது அவரது விரல் தவறுதலாக துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தியது. இதில் அவரது நெற்றியில் குண்டுபாய்ந்தது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமெரிக்காவில் அண்மையில் சிறிய ரக விமானத்தின் பைலட் செல்பி புகைப்படம் எடுக்க முயன்றதால் அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதேபோல் கார் ஓட்டும்போது பலர் செல்பி புகைப்படம் எடுக்க முயல்வதால் மேற்கத்திய நாடுகளில் விபத்துகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

எனவே விபரீதமான செல்பி முயற்சிகளை தவிர்க்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Post