பேலியகொடை, கொள்கலன் களஞ்சிய தொகுதியில் மொத்தம் 300 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொள்கலன் களஞ்சிய தொகுதியிலுள்ள சந்தேகத்திற்குரிய இரண்டு கொள்கலன்களில் இருந்து கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் இருந்தே கொக்கேய்ன் கைற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி 4,500 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் சில்வா குறிப்பிட்டார்.
பேலியகொடை கொள்கலன் களஞ்சிய தொகுதியில் 6 கொள்கலன்களை சோதனைக்கு உட்படுத்தியதை அடுத்தே இந்த கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.