பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி(ஸல்) காலத்தில் கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பழைமையான குர்ஆனை இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
‘ரேடியோகார்பன்’ பரிசோதனைக்கு இந்த குர்ஆனை உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி. 568 மற்றும் 645-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என 95.4 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணித்துள்ளனர்.