Breaking
Sun. Nov 24th, 2024
பிள்ளையை பாடசாலையில் சேர்த்து கொள்வதற்காக அவருடைய அம்மாவிடம் பாலியலை இலஞ்சமாக கேட்டேன் என்ற குற்றச்சாட்டை, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து, அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அயிராங்கனி பெரேரா முன்னிலையில், தனது குற்றத்தை ஏற்றுக்கொண்ட அதிபருக்கு எதிரான வழக்குக்கு தீர்ப்பு வழங்குவதற்காக, நீதிபதி அந்த வழக்கை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த தாய், தன்னுடைய பிள்ளையை பாடசாலையில் சேர்த்துகொள்வதற்காக கொட்டாவை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு சென்றுள்ளார். அச்சந்தர்ப்பத்தில், தன்னுடன் ஹோட்டலுக்கு வருவதற்கு விருப்பமாயின் பிள்ளை பாடசாலையில் சேர்த்துகொள்வதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், அந்த தாய், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறையிட்டுவிட்டு ஹோட்டலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் அதிபர், ஹோட்டல் அறையில் இருந்துள்ளார்.

அதனையடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதுசெய்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post