Breaking
Tue. Mar 18th, 2025

பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கம்பளை பொலிஸார் கட்டுகஸ்தோட்டை வத்துவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவரை கைது செய்து கைவிலங்கிட்டிருந்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர் திடீரென தலைமறைவாகியுள்ளார். இது குறித்து சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

சந்தேக நபர் கைவிலங்குடன் வாகனம் ஒன்றினை கலஹா நகரின் ஊடாக செலுத்திச் சென்ற போது கலஹா பொலிஸார் கண்டுபிடித்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது வாகனத்தில் அதிக போதைப் பாவனையுடன் நபர் ஒருவர் காணப்பட்டதாகவும் இந் நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

By

Related Post