Breaking
Mon. Dec 23rd, 2024

கொடதெனியாவயில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொடதெனியாவயில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியின் தந்தையான உப்புல் சாந்த மீதும் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் நீர்கொழும்பில் பிரபல பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சிறுவர் துஷ்பிரயோக வழக்கொன்று தொடர்பில் விளக்கமறியலில் இருந்தவரென தெரிவிக்கப்படுகின்றது. அவர் மீதும் அவருக்கு உதவியாக இருந்த இன்னொரு ஆசிரியருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் துஷ்பிரயோக வழக்கொன்றும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின்  கையில் காயமொன்று இருந்ததாகவும் , அவரைக் கடத்திய தினத்தன்று இரவு 10 மணியின் பின்னர் கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சிறுமியின் உடலில் , சந்தேகநபரினுடையது என சந்தேகிக்கப்படும் முடிகள் இரண்டு காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் டி.என்.ஏ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மரண பரிசோதனையின் பின்னர் சிறுமியின் தந்தையும் , அவரது பாட்டனாரும் அங்கிருந்து செல்லும் வேளையில் பிரதேசவாசிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post