மனிதர்களைக் கொலை செய்யும் கொடூரமான அரசின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள் ளோம். எமது இந்தப் போராட் டத்துக்கு அனைவரும் ஆதர வளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா குமாரதுங்க நேற்று அழைப்பு விடுத்தார்.
அத்துடன், பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறி சேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் என நான் உறுதியளிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
கொழும்பு – 07 விகாரமஹாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற பொது எதிர்க்கட்சிகளுக்கிடையிலான புரிந்து ணர்வு உடன்படிக்கையில் கைச்சாத் திடும் நிகழ்வில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு,
பொதுவேட்பாளரைக் களமிறக்கி நாட்டை மீண்டும் கட்டியயழுப்புவதற் கான போராட்டத்தை ஆரம்பித்துள் ளோம். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், மக் களைப் பற்றி சிந்திக்கும் அரசை நிலை நிறுத்தும் போராட்டமே இது. நாட்டை சீரழிக்கும் ஊழல், வெள்ளை வேன் இல்லாத ஆட்சியை ஸ்தாபிக்கும் போராட்டம் இது. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளும் எம்முடன் இணைந்துள்ளதுடன், பொது மக்களும் இணைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் இதுபோன்ற மனிதர்களைக் கொலை செய்யும், ஊழல் ஆட்சி நடத்தும் கொடூரமான அரசு நாட்டில் இருக்கவில்லை. 9 வருடங்கள் பொறுத்தேன். இனிமேலும் பொறுத்திருக்க முடியாது. இந்தப் போராட்டத்துக்கு தலைமைத் துவம் கொடுக்க மைத்திரி முன்வந்தார். மைத்திரிபால சிறிசேன ஊழல், மோசடி செய்பவர் அல்லர். தெளி வான அரசியல் கொள்கை, நல்ல நோக்கம் மற்றும் அரசியல் ஞானம் உடையவர். எனவே, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து புதிய ஆட்சியை உருவாக்க அவர் வழிவ குப்பார் என நான் உறுதியளிக் கின்றேன்.
நான் ஆட்சியில் இருந்த காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஏன் நீக்கவில்லை என மஹிந்த ராஜபக் கேட்கின்றார். நான் ஆட்சிக்கு வந்து 2 மாதத்திலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கு வதற்காக எனது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டேன். ஆனால் எமது அரசிடம் மூன்றில் இரண்டு பெரும் பான்மை அதிகாரம் இல்லாததால், அதைச் செய்ய முடியாமல் போனது. 1999 ஆம் ஆண்டு எமது அரசு முன்னிலையில் இருந்தது. பொருளா தார வளர்ச்சி 6 வீதமாக இருந்தது. ஆனால், எம்மிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதிகாரம் இருக்க வில்லை.
அதனால்தான் இப்போது மீண்டும் அந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள் ளேன். 9 வருடங்கள் பொறுத்துவிட் டேன். எனக்கு வயதும் போகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு என்னைவிட நல்லவர் ஒருவரைத் தேடித் தருகின்றேன் என்று கூறி மைத்திரிபால சிறிசேனவை கொண்டு வந்துள்ளேன். இன்னும் சில ஆண்டு களில் எமது பிள்ளைகளுக்கு இந்த நாடு இல்லாமல் போய்விடும். நாட்டை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக எமது போராட்டத்தில் அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஒருபோதும் போக மாட்டேன். அதனால் நீங்கள் அனைவரும் உங்களது ஆதரவைத் தாருங்கள். ஐக்கிய இலங்கையை உருவாக்கவும், அதிகாரம் மிக்க ஆட்சியை வீழ்த்தவும் சரியான தருணம் இது. பக்கத்து வீட்டின் முன்னே புலி வந்து வீட்டுக் காரரரைத் தாக்க முற்படும்போது நாம் பார்த்துக்கொண்டிருந்தால், புலி அவரை சாப்பிட்டுவிடும். எனவே, அவரைக் காப்பாற்ற நாமும் அவருடன் சேர்ந்து போராட வேண்டும். அதற்காக ஒன்றினைவோம். உருவாகப்போகும் புதிய அரசு ஐக்கிய தேசியக் கட்சியி னதோ அல்லது வேறு எந்தக் கட்சியி னது அரசோ அல்ல. இது அனைவ ரினதும் ஆட்சி. அனைவரும் ஒத்து ழையுங்கள் என்றார். (os)