Breaking
Mon. Dec 23rd, 2024

கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார்.அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Post