Breaking
Mon. Dec 23rd, 2024

கொட்டாவ – கடவத்தை அதிவேக வீதியூடாக பயணிக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்துக் கட்டணம் இன்று (23) வசூலிக்கப்படமாட்டாது என அதிவேக வீதியின் நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வௌ்ளம் காரணமாக கொட்டாவ – கடவத்தை அதிவேக வீதியூடாக பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தாது போக்குவரத்தில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணித் தொடக்கம் இரவு 10 மணி வரையே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பியகம வீதியில் தொடர்ந்தும் ஒன்றரை அடிக்கு மேலாக நீர் மட்டம் காணப்படுவதனால் மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து நெருக்கடியினை தவிர்க்கவே இந்த சலுகை வழங்கியதாக அவர் மேலும் கூறியுள்ளார்

மேலும் வௌ்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் போது ஏற்படக்கூடிய வாகன நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்கும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

By

Related Post