Breaking
Wed. Dec 25th, 2024

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கிழக்கு மாகாண விஜயத்தின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று இரவு 9 மணிக்கு வருகை தந்து உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு வரலாறு காணாத மக்கள் வெள்ளம் (கொட்டும் மழை வெள்ளத்திலும்) திரண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இங்கு குழுமியிருந்த மக்கள் முஸ்லிம் சமூகத்தின் மறைந்த தலைவர் அஷ்ரபிற்குப் பிறகு சமூகத் தொண்டனாக தங்களை பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீனிடம் தெரிவித்ததுடன் நமது தலைவர் நமது தலைவர் என்ற கோசத்துடன் வரவேற்றனர்.

கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத், மெற்றும் கல்முனை பிரதேச அ.இ.ம.கா. கட்சியின் பேராளிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்ட இங்கு உரையாற்றிய ரிசாத் பதியுதீன்,

ஜனாதிபதி ஒரு அகங்காரம் பிடித்த ஒருவாராக இருந்தார். முஸ்லிம்களுக்கு கடந்த இரண்டு வருடகாலம் நடந்த கொடுமையை தட்டிக் கேட்க முனைந்தபோதெல்லாம் நாம் ஜனாதிபதியினால் வஞ்சிக்கப்பட்டோம். தம்புள்ள முதற்கொண்டு நாட்டின் நாலா புறங்களிலும் உள்ள அனைத்து பிரதேச முஸ்லிம்களின் உரிமைகளையும் கருத்தில் கொண்டே நாம் அரசாங்கத்தில் இருக்கும் நெருக்கத்தையும் மீறி, என்னை பாராளுமன்றுக்கு அனுப்பிய எமது மக்கள் கூறியதையும் மீறி இலங்கை வாழ் முஸ்லிம்களின் உரிமை, மத சுதந்திரம் அச்சமற்ற வாழ்வு என்ற விடயங்களுக்காக இன்று அணைத்தையும் துறந்து உங்கள் முன்வந்திருக்கின்றேன்.

எனக்கு ஜனாதிபதின் கடும்தொனியை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், பஷீல் ஒரு நல்ல மனிதர் என் நல்ல நண்பர். அந்த நட்பையும் இழந்தே இன்று நாம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக ஒன்றுதிரண்டு இருக்கின்றோம். எனது பாதுகாப்பு அல்லாஹ்விடமே…

எனவே கட்சிபேதங்களை மறந்து முஸ்லிம்கள் அனைவரும் எதிர்கால ஆபத்திலிருந்து பாதுகாப்புப் பெற மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முன்வர வேண்டும். என்றும் குறிப்பிட்டார்.

Related Post