Breaking
Tue. Jan 14th, 2025

-ஊடகப்பிரிவு-

மன்னார் மாவட்ட பிரதேச சபை தேர்தலில் கொண்டச்சி, கரடிக்குளி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் சுபியான் ஆசிரியரை ஆதரித்து,  கொண்டச்சி அமைப்பாளர் லாபீர் மெளலவியின் தலைமையில் இன்று மாலை (14) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

கொண்டச்சி  கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால செயற்பாடு சம்பந்தமாகவும், ஏன் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும்? என்பது தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் பற்றியும் தெளிவான உதாரணங்கள் மூலம் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் தேர்தலில் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம், மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரத்தைப் பலப்படுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற உண்மையும் உணர்த்தப்பட்டது.

மேலும், கொண்டச்சி  கிராமத்திற்கான வேட்பாளரின் முதற்கட்ட சேவையாக 25 தெரு விளக்குகளும், பள்ளிக்கான ஒலி பெருக்கியும் இன்னும் சில தினங்களில் வழங்கப்படும் என்ற  உறுதி மொழியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும், முசலி அபிவிருத்திக்கு பொறுப்பாளருமான அலிகான் ஷரீப் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

Related Post