கொட்டதெனியாவ சிறுமி சேயா சதேவ்மி கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த காவற்துறையின் தடுப்பில் இருக்கும் போது தாக்கப்படவில்லை என காவற்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
எனினும் காவற்துறையினர் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறியிருந்த துனேஷ் பிரியசாந்த, காவற்துறையினரின் தாக்குதலில் உடலில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் காட்டும் புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
இதனால், காவற்துறைப் பேச்சாளார் தாக்குதல் நடத்தப்படவில்லை என கூறியிருப்பது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சிறுமி சேயாவின் கொலை சம்பந்தமான விடயத்தில் கொட்டதெனியாவ காவற்துறையினர் உட்பட முழு காவற்துறையினர் நடந்து கொண்ட விதம் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் எவ்வித விசாரணைகளும் நடத்தாமல் குற்றவாளிகளாக ஊடகங்களுக்கு காட்டியமை என்பன மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது.