சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் புகுந்து நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக கொண்டயா மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரினால் கைது செய்யப்படும் எந்தவொரு நபரும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் சந்தேக நபராகவே கருதப்படுகின்றார்.
சாட்சி கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணை நடத்தப்படுகின்றது. சந்தேக நபர் ஒருவரை குற்றவாளியாக அடையாளப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரமில்லை.
ஊடகவியலாளர்களுக்கு செய்திகளை அறிக்கையிட உரிமையுண்டு.
சந்தேக நபர் தொடர்பில் ஊடகங்களில் பிரசூரமான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு சொல்ல வேண்டும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
கொண்டயா தொடாபில் கம்பஹா நீதிமன்றில் நேற்று வழக்கு ஒன்று விசாரணை நடத்தப்பட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.
கொண்டயாவிற்கு நேற்று பிணை வழங்கப்பட்ட போதிலும், பிணையில் எடுக்க எவரும் முன்வாரத காரணத்தினால் விளக்க மறியல் நீடிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.