கொட்டதெனியாவ சிறுமி சேயா படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவை ஆதாரபூர்வமான குற்றவாளியாக சித்தரித்திருந்த பொலிசார் , அவரை சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கியிருந்தனர்.
எனினும் மரபணு பரிசோதனையின் ஊடாக அவர் நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அநியாயம் இழைக்கப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவுக்கு ஆதரவாக உதுல் பிரேமரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அநியாயம் துனேஷ் பிரியசாந்தவுக்கு ஆதரவாக செயற்படும் சட்டத்தரணிகளுக்கு எதிராக நேற்று கம்பஹா, பெலும்முல்லை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
உதுல் பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களின் நிதியில் செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.