Breaking
Sun. Dec 22nd, 2024

நாட்டில் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகளை வழங்கும் வகையிலும், வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் கொரியா கொலோன் சர்வதேச நிறுவனத்தினால் அதிகளவிலான நன்கொடைகள் நமது நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இவ் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை வழங்கும் வகையில் 12,000,000 ரூபா பெறுமதியான 03 தண்ணீர் தாங்கிகளும், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 8,000,000 ரூபா பண உதவியையும் வழங்கியுள்ளனர்.

கொரியா கொலோன் சர்வதேச நிறுவன தலைவர் ஷாங் வூன் யூன், கொரியா கொலோன் சர்வதேச நிறுவன சிரேஷ்ட துணை தலைவர் யூங் ஹோ ஹான், துணைத் தலைவர் ஜோங் வூ ஜூங், நிறுவன நாட்டு முகாமையாளர் ஜூன் யங் லிம், பொது முகாமையாளர் எலெய்ட் ஜூன்சுவா பார்க், ஹூ வொன் லிம், கே. எஸ். கே. கின்டேலிப்பிட்டிய பிரதி பொது முகாமையாளர், ஒருங்கிணைப்பாளர் நிமல் கதிரஸ்சுவாமி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்திருந்தனர்.

By

Related Post