முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சில தினங்களில் தென்கொரியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தென்கொரியாவில் வசிக்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்கு இதன்போது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது. பொது எதிரணி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள சூழலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தென்கொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி இழந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாய்லாந்து, உகண்டா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். தற்போது அவர் தென்கொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.