Breaking
Mon. Dec 23rd, 2024

-சுஐப் எம் காசிம் –

வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொலன்னாவைப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்காண மக்கள் அகதிகள் முகாம்களிலும் பாடசாலைகளிலும், பன்சலையிலும் தனியார் வீடுகளிலும் தங்கியிருந்து மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்கின்றனர்.
உடுத்த உடையைத் தவிர எதையுமே கொண்டுவராத இந்த மக்களுக்கு கடந்த திங்கட்கிழமையிலிருந்து 27 பள்ளவாசல்களை நிர்வகிக்கும் கொலன்னாவை பள்ளி சம்மேளனம் இறைவன் உதவியால் முடிந்தவரையில் உதவி வருகின்றது.
முதலாம் நாள் 3000 சாப்பாட்டுப் பார்சல்களை தயாரித்து வழங்கும் வேளைகளை தொடங்கிய நாம் உன்று நாள ஒன்றுக்கு 8000 பார்சல்களை அகதிகளுக்குக் கொடுக்கக் கூடிய வகையில் பரோபகாரிகளும் தனவந்தர்களும் நல்ல மனம் படைத்தவர்களும் எமக்கு உதவியுருக்கின்றனர். இவர்களுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.
சில இடங்களில் வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதால் அந்தப் பிரதேசங்களிலுள்ள வீடுகளை துப்பரவாக்கும் பணியை எமது சம்மேளனம் பணியாளர்களின் உதவியுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு அடுத்த கட்டமாக வீடுகளுக்கு உதவுவோருக்கு சமையல் பாத்திரங்களையும் அதற்கு ஏற்ற உபகரணங்களையும் வழங்குவதுடன் சமைப்பதற்குத் தேவையான உலர் உணவுகளையும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
 இவற்றையெல்லாம் செய்வதற்கு எமக்கு உதவி புரிய பல நூற்றுக்கணக்காண பரோபகாரகள் முன்வந்துள்ளனர். நாம் பிரமான்டமான ஒரு வேளை திட்டத்தை மேற் கொண்டு வருவதால் எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். அதே வேளை கொலன்னாவை மக்களுக்கு உதவி புரிய தனிப்பட்ட ரீதியிலும் சமூக இயக்கங்களாகவும் சிலர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை நாம் வரவேற்கும் இதேவேளை அவ்வாறான நலன் விரும்பிகள் எம்முடன் இணைந்தோ அல்லது எமது வழிகாட்டலிலோ செயற்படுவதே சிறப்பானது என்ற கருத்தை நாம் இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றோம் என்று கொலன்னாவை பள்ளி சம்மேளனத் தலைவர் ஐ வை எம் ஹனீப் தெரிவித்தார்.

By

Related Post