Breaking
Sun. Mar 16th, 2025

தம்பதியரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை நேற்று (29) நீதிபதி என்.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த தம்பதியரின் குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் 50 வயதான நீர்வேலி பகுதியைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post