Breaking
Mon. Dec 23rd, 2024

நுகேகொடை மற்றும் கோட்டே ஆகிய பிரதேசங்களில் இன்றைய தினம் நீர்வெட்டுஅமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய எத்துல்கோட்டே, பிட்டகோட்டே, உடஹமுல்ல, நுகேகொடை, பாகொடை, ஹலெவல் வீதியின் நுகேகொடை சந்தியிலிந்து விஜேராம சந்தி வரையான பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாவலை வீதியிலிருந்து திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதிகள் உட்பட இதனை அண்மித்த அனைத்து பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 8மணி வரைக்கும் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post