Breaking
Mon. Dec 23rd, 2024
கொழும்பில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் புலனாய்வு அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் விற்பனை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மொஹமட் சித்திக் என்ற நபரை, வெளியார் ஒருவர் நீதிமன்றத்தில் சந்திக்க, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையாக செயற்படும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தயங்காது எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.
போதைப் பொருள் விற்பனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மொஹமட் சித்திக் என்பவரை, வெளிநபர் ஒருவர் சந்திக்க சந்தர்ப்பம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த அதிகாரிகள் மூன்று பேர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சித்திக் என்ற சந்தேக நபர் தற்போது சிறையில் பாதுகாப்பான சிறை அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த நபருக்கு விசேட சலுகைகள் கிடைப்பதை தடுக்கும் வகையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

Related Post