தலைநகர் கொழும்பில் கடுமையான எலித் தொல்லை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நகரில் துரித கதியில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பிரதான சுகாதாரப் பரிசோதகர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஏப்ரல் மாதத்தில் 53000 வீடுகளுக்கு எலிகளை அழிப்பதற்கான மருந்த வகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 50000 வீடுகளுக்கு இந்த மாதத்தில் இந்த வகை மருந்துகள் வழங்கப்படவுள்ளன.
கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை அதி வேகமாக பரவி வருவதாகவும், இதனால் லெப்டோஸ்பய்ரோசிஸ், மா மாரியா உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் நோக்கிலேயே எலிகளை கொல்லும் மருந்து வகைகள் விநியோகம் செய்யப்படுகின்றது.
எலிகளை அழிப்பதற்கான மருந்து வகைகள் கிடைக்காத வீடுகள் கொழும்பு பொது சுகாதார திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 011-2503550 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து அறிவிக்க முடியும் என ருவான் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.