ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஐக்கிய அரபு இராட்சியத்தின் 43வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள ஐக்கிய இராட்சிய தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய தின நிகழ்வினை கொழும்பு கில்ட்டன் ஹோட்டலில் தூதரகத்தின் தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே.எச். அல்முல்லா தலைமையில் இன்று (02) மாலை இடம் பெற்றது.
இதன்போது தேசிய தினத்தை கொண்டாடு முகமாக தூதுவர் மற்றும் பிரதம அதிதியின் உரைகளைத் தொடர்ந்து பிரதம அதிதி அமைச்சர் டிலான் பெரேரா, தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே.எச். அல்முல்லா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டார நாயக்க ஆகியோரால் ஹேக் வெட்டி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.