Breaking
Thu. Jan 9th, 2025

வௌ்ளவத்தை இராமகிருஸ்ண மற்றும் விவேகானந்த வீதிகள் இன்று சில மணித்தியாலங்கள் ஒருவழி போக்குவரத்து நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணியில் இருந்து முற்பகல் 11 மணிவரையும் மாலை 3 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் இந்த ஒருவழி போக்குவரத்து ஒத்திகை நடத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில் இராமகிருஸ்ண வீதி ஊடாக கடற்கரை பகுதிக்கு மாத்திரமே வாகனம் செல்ல அனுமதிக்கப்படும். விவேகானந்த வீதி ஊடாக கடற்கரை பகுதியில் இருந்து காலி வீதியை நோக்கி செல்வதற்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்படும்.

Related Post