தொட்டலங்க பகுதியில் நேற்று (16) மாலை மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொட்டலங்க ஜப்பான் நட்புறவு பாலத்தை மறித்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
தொட்டலங்க பிரதேசத்தில் அனுமதியற்று கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பிரதேச மக்கள் நேற்று முதல் இவ்வாறு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் நேற்று மாலை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், இன்று காலையும் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கொழும்பில் சில பகுதிகளில் பாதைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.