Breaking
Sun. Dec 22nd, 2024

கொழும்பு சைத்­திய வீதியில் ‘புட்டு பம்பு’ எனும் பெய­ரிலும் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீட வளா­கத்தில் நிலத்­துக்கு கீழ் ‘கன்சைட்’ எனும் பெய­ரிலும் கடற்­ப­டையின் இர­க­சிய தடுப்பு முகாம்கள் இருந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

புலிகள் இயக்க சந்­தேக நபர்­களை தடுத்து வைப்­ப­தாக குறிப்­பிட்டே இந்த இர­க­சிய முகாம்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அந்த முகாம்­களில் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் வைத்து கடத்­தப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மைக்­கான ஆதா­ரங்கள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்­துள்­ளன.

முன்னாள் கடற்­படை தள­பதி அட்மிரல் வசந்த கரன்­னா­கொட தனது பாது­காப்பு அதி­கா­ரி­யான லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்டின் கீழ் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவே இந்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதற்­க­மைய கடந்த 2008.09.17 அன்று இரவு தெஹி­வளைஇ பெர்னாண்டோ மாவத்­தையில் வைத்து ரஜீவ நாக­நாதன்இ பிரதீப் விஸ்­வ­நாதன்இ தில­கேஷ்­வரம் ராம­லிங்கம்இ மொஹம்மட் நிலான்இ மொஹம்மட் சாஜித் ஆகிய மாண­வர்­களும்இ கொட்­டாஞ்­சேனையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட்இ மன்னார் அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன்இ ரொஷான் லியோன்இ கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆரச்சிஇ திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த கண­க­ராஜா ஜெகன்இ தெஹி­வ­ளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேருமே இவ்­வாறு கடத்­தப்­பட்டு கொழும்பு சைத்­திய வீதியில் உள்ள புட்டு பம்பு எனும் ரக­சிய தடுப்பு இடத்­திலும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தின் கன்சைட் எனும் இர­க­சிய நிலத்­தடி சிறைக் கூடத்­திலும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மைக்­கான சான்­றுகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசேட அனு­மதி ஒன்­றினைப் பெற்­றுக்­கொண்டு புல­னாய்வுப் பிரிவின் கூட்டு கொள்­ளைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டி சில்­வா­த­ல­மை­யி­லான குழு இவ்­விரு ரக­சிய தடுப்பு முகாம்­க­ளையும் ஆய்வு செய்­துள்­ள­துடன் தற்­போதும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள நிலத்­தடி சிறைக் கூடங்­களை உள்­ள­டக்­கிய குறித்த கன்சைட் எனப்­படும் இர­க­சிய இடத்­துக்கு சீல் வைத்து மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

குறித்த பெயரில் இர­க­சிய தடுப்பு முகாம்­களை நடத்திச் சென்­றமை தொடர்பில் அப்­போ­தைய திரு­கோ­ன­மலை கடற்­ப­டையின் கட்­டளை தள­ப­தியும் தற்­போ­தைய கடற்­படை தலை­மை­யக விநி­யோக பிரிவு பணிப்பாளராக கடமையாற்றுபவருமான கொமான்டர் கஸ்ஸப கோத்தாபய போல் உள்ளிட்ட 22 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்துள்ள நிலையில் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேவுக்கும் அறிக்கை சமர்பித்துள்ளனர்.vk

Related Post