அஸ்ரப் ஏ சமத்
ஜக்கிய சமாதாண இயக்கம் ஏற்பாடு செய்த பர்மாவில் வாழும் முஸ்லீம்களுக்கான அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று ஜூம்ஆத் தொழுகைக்குப் பின் கொழும்பு தெவட்டகா பள்ளியில் இருந்து ஆரம்பித்து ரொஸ்மிட் பிளேசில் உள்ள மியன்மார் ;தூதுவரடிடம் கண்டன அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சர் றிஷாத் பதியுதீன், மேல்மாகாண சபை உறுப்பிணர்கள் முஜிபு ரஹ்மான், பைருஸ் ஹாஜி, தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி ஆகியேர்ர் ஊர்வலமாகச் சென்று தூதுவரிடம் கண்டன அறிக்கையும் அப்பாவி மக்களை கொண்று குவிப்பதையும் உடனடி நிறுத்துமாறும் பர்மா அரசுக்கு அறிவிக்கும் படி கண்டன அறிக்கையை சமர்ப்பித்தனர்.
அத்துடன் தூதுவரலாயத்திற்கு முன்பாக அந்த நாட்டுக் கொடி எரிக்கப்பட்டது. அத்துடன் அம்மக்களுக்காக துஆப் பிரத்தனையும் இடம்பெற்றது.