Breaking
Mon. Dec 23rd, 2024

உல்லாசப்பிரயாணிகள் கொழும்பின் அழகை கண்டுகளிக்க படகு சேவையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப் ​போவதாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்தார்.

அண்மையில் பத்தரமுல்ல, தியத்த உயன கடற்படை படகு போக்குவரத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் வெள்ளவத்தை வரையிலான படகு போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

இத்திட்டத்திற்கு உதவி வழங்கவுள்ள நெதர்லாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் திருமதி ஜோன்ஏன் டுர்னேவோட்டும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த கேளிக்கை விடுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு நகரில், புதிய தொனிப்பொருளில், புதிய திட்டத்தின் கீழ் திட்டங்களை செயற்படுத்தவுள்ளோம். இளைஞர் யுவதிகள் ஆங்காங்கே காலத்தை வீணாக்குவதை விடவும் சுதந்திரமான, அழகான இடத்தில் இயற்கையை இரசித்து காலத்தை செலவிட இது வாய்ப்பாக அமையும் என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post