Breaking
Wed. Mar 19th, 2025

இலங்கையில் நடந்த  2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள்  கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியினை செலுத்தி வெற்றியினை கொண்டாடியுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் கொழும்பில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை  நேற்று மாலையில் ஹர்பஜன் முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து அதனை ஹர்பஜன் சிங் செலுத்தி அணித்தலைவர்  விராட்  உள்ளிட்ட வீரர்கள் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு  சந்தோஷமாக கொழும்பு நகரை வலம் வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார்.

Related Post