Breaking
Sun. Dec 22nd, 2024

இந்த வாரத்தின் இறுதியில் கொழும்பில் இருந்து கண்டிக்கு இரண்டு விசேட புகையிரத சேவைகள் நடைபெறும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை போயாதினம் என்பதால் அன்றைய தினம் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனையடுத்தே குறித்த புகையிரத சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளைய தினம் மாலை 5.20இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டியை நோக்கி விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் நாளை மறுதினம் காலை 5.50 மணியளவில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி விசேட புகையிரதம் புறப்படும் எனவும் புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

By

Related Post