Breaking
Fri. Nov 15th, 2024

அதிபர் அஷ்ஷேய்க் நாஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். தலைமையுரையை நிகழ்த்திய அதிபர், மத்ரஷாவின் 17வருடகால சாதனைகளையும் வரலாற்றையும் எடுத்துரைத்தார்.
இவ்வைபவத்தில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்ட அஷ்ஷேய்க் யூசுப் ஹனிபா (முப்தி) அவர்கள், உரையாற்றிய போது, நல்ல விஷ்யங்களுக்குச் செலவழித்தல், கொடுக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் பிரயோஷனங்களை விட, கொடுத்தவருக்குக் கிடைக்கும் நன்மை மேலானது என்றார்.
புனித நோன்பு எம்மை வந்தடையும் முன்னர், பாவ மீட்சி பெற்று எம்மைத் துப்பரவு செய்து கொண்டு அதனை வரவேற்போம் என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், நிம்மதியாக எமது நோன்பை இபாதத்துடன் கழிக்க வேண்டும.; எமது கையடக்கத் தொலைபேசியான ‘மொபைலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்றார்.
தற்போது வழக்கறிஞராக இருக்கும் அஷ்ஷேய்க் அல்ஹாபிழ் றஸீன் மதீனா பல்கலைக்கழக பட்டதாரி அஷ்ஷேய்க் தாஜீல் இஸ்லாம் தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டதார்p அஷ்ஷேய்க் மபாஷ் ஆகியோர் தங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த இமாம் ஷாபிஈ மத்ரஷாவின் சேவையினைப் பாராட்டிப் பேசினார்கள்.
மத்ராஸாவின் உபதலைவர் அஹ்ஹேய்க் பாஸீல் பாரூக் அவர்கள் சமகால சவால்களை எதிர் கொள்வதற்காக மார்க்கக் கல்வியோடு பாடசாலைக் கல்வியும் போதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் சரப்தீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Related Post