Breaking
Tue. Dec 31st, 2024

கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு குப்பை கொண்டு வந்து கொட்டப்படவுள்ளமைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம், இன்று சனிக்கிழமை புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.

சீமெந்து தொழிற்சாலை, அனல் மின் நிலையக்கழிவுகளால் பல்வேறு அசௌகரியங்களை புத்தளம் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் தூசு துணிக்கைகளால், அப்பகுதி விவசாயம் முற்றாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், சுவாச நோய் உள்ளிட்ட பல நோய்களால், உயிர் இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

முறையான சுற்றாடல் பாதுகாப்பு, பத்திரமில்லாத அனல் மின் நிலையத்தினை மக்கள் பல எதிர்ப்புக்களைத் தெரிவித்தும் கடந்த அரசாங்கம் அத்திட்டத்தை அமைத்தது.

அதேபோல் தற்போது கொட்டப்படவுள்ள இலத்திரனியல்,பிளாஸ்த்திரிக் மற்றும் மருத்துவக்கழிவுகளால் அவ்விடத்தை அண்மித்துள்ள பகுதிகள் பல தரப்பட்ட வளங்களை இழக்கும் அபாயம் ஏற்படவுள்ளது. மேலும்  பல தரப்பட்ட நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலையும் காணப்படுகின்றன.

இவ்வாறான சூழலைப் பாதிக்குப் பிரச்சினைகள் தொடர்ந்தும் புத்தளத்தில் தினிக்கப்பட்டு வருகின்றமையைக்கண்டித்து, அப்பகுதி மக்களின் உரிமைகளுக்காக உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இவ் உண்ணாவிரத போராட்டத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம்,  மாகாண சபை உறுப்பினர் நியாஸ், நகர சபை தலைவர் பாயிஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள்  தலையில் கறுப்பு நிறப்பட்டியணிந்து கலந்துக்கொண்டனர்.

– இஹ்ஸான் –

Related Post