Breaking
Mon. Dec 23rd, 2024

பேலியகொடை மீன் சந்தை வர்த்தகர்கள் நேற்றைய தினம் (17) பிரதான வீதியின் ஒரு மருங்கில் மீன் விற்பனை செய்து வித்தியாசமான முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தனர்.

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பேலியகொடை மீன் சந்தை முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்த தகவல்கள் அறியாத நிலையில் நேற்றுக் காலையும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மீன் லொறிகள் பேலியகொடை மீன் சந்தைக்கு வருகை தந்திருந்தன.

இதனையடுத்து பேலியகொடைகொயிலிருந்து கொழும்பு வரும் பிரதான வீதியின் ஒரு மருங்கில் தமது மீன்களை வைத்து நேற்றையதினம் மீன் வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக போக்குவரத்துக்கு சிறிது இடைஞ்சல் ஏற்பட்டிருந்த போதும் மீன் வியாபாரிகளின் பாதிப்பை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

By

Related Post