– அஸ்ரப் ஏ சமத் –
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் நேற்று (21) சனிக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இலக்கியவாதிகள் ஊடகவியலாளா்கள் சமுகசேவையாளா்கள் கல்விமாண்கள் கௌரவிப்பு விழாவும் கவித்தீபம் நுஸ்றி ரஹ்மதுல்லாஹ் எழுதிய கடல் தேடும் நதி மற்றும் பேச மறந்த வாா்த்தை குறுந்திரைப்படம் வெளியீடு விழா நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வா்தத்க அமைச்சா் றிசாத் பதியுதீன், கலந்து கொண்டு நுால்பிரதிகளையும், கொளரவிப்புக்களையும் நடாத்தினாா்.
மறைந்த கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அவா்களின் ஞாபகாத்த விருதுகளும் சான்றிதழ்களும் பட்டமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பேராசிரியா் துறை மனோகரன், ஓய்வு பெற்ற அரச தொழில்நுட்பக் கல்லுாாி அதிபரும் மறைந்த எம்.எச்.எம். அஸ்ரபின் அமைச்சின் ஆலோசகராகக் கடமையாற்றிய எம்.எச்.ஏ சமத் தினரகன் வாரமஞ்சரி இணை ஆசிரியரும், கவிஞரும் எழுத்தாளருமான சுஜப்.எம். காசீம் மற்றும் மக்கிய முசம்மில், பதியத்தலாவ பாருக், சுல்பிகா சரீப், வுவனியா செந்துரான், கவிஞா் த. ரூபன், கவிதாயினி எஸ். ஆர் கலா, காத்தாண்குடி பௌஸ், வவுனியா செந்துாரன், என பங்குபற்றினர்