Breaking
Tue. Mar 18th, 2025

எட்டு இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு புத்தகங்களை கொண்ட மிதக்கும் உலக புத்தக கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. இக்கப்பலில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விடயங்களைக் கொண்ட பல தரப்பட்ட புத்தக கண்காட்சியும் இடம்பெறுவதாக இக்கப்பலின் தொண்டர் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை அதிகாரியான எப். வின்ஸ்டன் தெரிவித்தார்.

அவர் மிதக்கும் புத்தகக் கப்பல் பற்றிய தகவல்களை மேலும் தெரிவிக்கையில் இலங்கைக்கு மீண்டும் வருகை தந்துள்ள லோகோஸ் ஹோப் கப்பலின் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பயன் பெறக்கூடிய வகையில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான பலதரப்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலக புத்தக மிதக்கும் கப்பலின் ஆசியாவிற்கான இறுதி விஜயம் இதுவாகும்.

By

Related Post