ஜனாதிபதி மைத்ரிபாலவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்தமை கட்சிக்குக் கிடைத்த வெற்றியெனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீலசுக, கட்சி பிளவுறும் அபாயம் நீங்கி விட்டதாகவும் இனியும் அவ்வாறு இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறு இல்லையெனவும் தெரிவித்துள்ளது.
நேற்றைய சந்திப்பின் போது: எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை நியமித்தல், உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எனும் கூட்டணியை தொடர்ந்தும் பேணுதல், நிதிமோசடிப் பிரிவு அரசியல் மயப்படுத்துவது மற்றும் வேட்பாளர் நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இது குறித்து சுக மத்திய குழு கூடி விரிவாக ஆராயும் எனவும் சு.க அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டபோதும், மைத்திரி அதற்கு சாதகமான பதிலளிக்கவில்லையென நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. மகிந்த தேர்தலில் போட்டியிட தனக்கு எந்த ஆட்சேபமுமில்லையென கூறிய மைத்திரி, ஆனால் பிரதமர் வேட்பாளர் குறித்து இப்பொழுதே முடிவெடுக்க முடியாதென அணித்தரமாக கூறிவிட்டார்.
பிரதமர் பதவி குறித்த எந்த உத்தரவாதமுமில்லாமல் மகிந்த தேர்தலில் போட்டியிட மாட்டாரென்பதால், அவர் அடுத்த பொதுதேர்தலில் களமிறங்குவது சந்தேகமாகியுள்ளது.