Breaking
Mon. Dec 23rd, 2024

கொழும்பு நடைமுறை மாநாட்டில் ஐந்து பிரதான விடயங்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எட்டப்பட்டதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகொரல தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (25) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தொழிலாளர்களின் ஆற்றல்களை கண்டறிதல், சிறப்பான தொழில்வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள், தொழில் சந்தை ஆய்வு, அந்நிய நாட்டு செலாவணியை முறையாக கவர்ந்திழுத்தல் ஆகிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

கொழும்பு நடைமுறையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டமும், அமைச்சர்களின் மாநாடும் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நேற்று ஆரம்பமானது 11 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இம்முறை இதில் கம்போடியாவும் அங்கத்துவம் பெற்றுள்ளது.

கொழும்பு நடைமுறையின் சமகால தலைவியாக அமைச்சர் தலத்தா அத்துகொரல கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post