Breaking
Sat. Jan 11th, 2025

நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது.

மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன் இவ்வாறு திரும்பிச் சென்றது என்பதற்கான காரணம் தற்போது வௌியாகியுள்ளது.

விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குடித்து விட்டு குழப்பம் விளைவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேஷியன் ஏயார்லயின்ஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த விமானம் இன்று காலை 10.06க்கு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Post