Breaking
Sun. Dec 22nd, 2024

-இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் –

புத்தளம் மக்களுக்கு பெருந்தொந்தரவாகவும்,பாதிப்பாகவும் அமையப்போகும் கொழும்பு – புத்தளம் குப்பைத்திட்டத்தை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கான அழைப்பினை கொழும்பு –புத்தளம் குப்பைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் விடுத்துள்ளது.

மேற்படி இயக்கம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள பிரசுரமொன்றின் மூலம் இந்த அழைப்பினைவிடுத்துள்ளது. –

அந்த பிரசுரத்தில் தெரவிக்கப்பட்டுள்ள விடயங்களாவன –
புத்தளம் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையவுள்ள இந்த திட்டம் தொடர்பில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது மக்களினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக் காரணமாக அது கிடப்பில் போடப்பட்டது.

ஆனால் தற்போதைய மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்தின் கீழ் கொழும்பு குப்பைகளை புத்தளம் எலுவன்குளம்,அறுகைகாட்டு பிரதேசத்தில் கொட்டும் திட்டத்தை மீண்டும் செயற்படுத்த தயராகுவதாக அறியக் கிடைக்கின்றது.கொழும்பு நகரில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளையும்,
தற்போது மலை போல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளையும்,புகையிரதம் மூலம் புத்தளம் அறுவைக்காடு பகுதியில் கொண்டுவந்து கொட்டுவது இத்திட்டமாகும்.

இவ்வாறாக அபயகரமான நடவடிக்கைகளினால் புத்தளம் பிரதேசத்தில் வாழும் மக்கள் பாரிய துர்நாற்றம் உட்பட பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு முகங்கொடுக்கவும்,அறுவைக்காடு பகுதியின் சூழல் பாரியளவில் மாசடைவதினால் புத்தளம் பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதாரங்கள்,தங்கியுள்ள இயற்கை வளங்களுக்குப் பாரதுாரமான தாக்கம் ஏற்படும் நிலைமையும் உருவாகியுள்ளது.இதற்கு எதிராக புத்தளம் மற்றும் சூழவுள்ள கிராமப் பகுதி மக்கள் தனித்தனியாகவும்.பல்வேறு அமைப்பு ரீதியாகவும் எதிர்ப்பு மகஜர்களில் கையொப்பம் சேகரித்தனர்.பிகடிங் செய்தனர்.அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகளிலும் அளுத்தங்களைக்கொடுத்தனர்.

அவற்றின் பெறுபெறாக தற்போது குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டும் இடமாக தீர்மானிக்கப்பட்டிருந்த அநுவைக்காட்டினை கைவிடும் மத்திய சுழல் அதிகாரச் சபை எடுத்துள்ளது.ஆயினும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நகர அபிவிருத்தி அதிகார சபை வண்ணாத்தவில்லு பகுதியில் வேறொரு இடத்தில் கொழும்பு குப்பைகளை கொட்டுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இதற்கு எதிராக ஒன்றிணைந்த நடவடிக்கை அவசியமாகின்றது.கொழும்பு குப்பைகளை எக்காரணம் கொண்டும் புத்தளத்தில் கொட்ட தேவையில்லை.இதற்கு ஒரு போதும் நாம் உடன்படப் போவதில்லை.உலகில் எந்த இடத்திலும் மீள் சுழற்சி செயற்பாடுகள் மக்களுக்கு பாதிப்பாக செயற்படுத்தப்படுவதில்லை.அதே போல் குப்பை மீள்சுழற்சி செயற்பாடுகளை அந்தந்த உள்ளுராட்சி மன்ற பகுதிக்குள் செய்து கொள்வது பொருத்தமாகும் என்பது எமது நிலைப்பாடு.

நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வது,கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டுவருவதை உடனடியாக நிறுத்துங்கள்,இத்திட்டத்தினை நிறுத்தவில்லையென்றால் தீர்க்கமான போராட்டத்துக்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இக் குப்பைத் திட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக புத்தளம் பெரிய பள்ளி அறுவைக்காடு குப்பபைத்திட்ட எதிர்ப்பு செயலணி,புத்தளம் மக்கள் குரல்,புத்தளம் நிபுணர்களின் அமைப்பு மற்றும் சர்வ மத சமய நியைலங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அந்த பிரசுத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post