சீனாவினால் நிர்மாணிக்கப்படவுள்ள கொழும்பு போட்சிட்டி உரிமை தொடர்பில் ஆங்கில சட்டங்கள் பின்பற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
இது தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க, பிரித்தானிய குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போட்சிட்டி என்ற இந்த நிர்மாணம் நிதிநகரம் என்ற பெயரில் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் அமைக்கப்படுகிறது. இது சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான நிதிமையமாக செயற்படும் என்று ரணில் தெரிவித்துள்ளார்.
இந்தநிகழ்வில், தெலுங்கானா வணிக அமைச்சர் கே டி ராமாராவ், மலேசியாவின் பெரேக் பிராந்திய முதலமைச்சர் ஸம்ரி அப்துல் காதிர், உலக வங்கியின் மனித உரிமை அபிவிருத்தி பணிப்பாளர் அமிட்டார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.