Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதம அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக  தெரிவித்தார் .

உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் நோக்கிலேயே தாம் இந்த முடிவை எடுத்தாக அவர் தெரிவித்தார்.

, அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாநகரசபையில் தனித்து, தனது மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது.ராஜகிரியவில் உள்ள கொழும்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மக்கள் காங்கிரஸ் இன்று மாலை (18/12/2017)கட்டுப்பணத்தை செலுத்தியதை அடுத்தே மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் தேர்தலில் குதிக்கும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடத்தப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு.

Related Post