அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கொரோனா (Covid -19) நிவாரண நிதியத்துக்கான தனது பங்களிப்பை கடந்த மாதமுதல் நாட்டில் பல்வேறு பிரதேசங்களுக்கு செய்திருந்தார்.
அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்தின் உலமா சபை மற்றும் அதனோடிணைந்த அமைப்புக்களுக்கும் கொரோனா நிவாரண நிதியத்துக்கான தனது பங்களிப்பைச் செய்திருந்ததுடன், தம்மால் இயன்றளவு பல உலருணவுப் பொதிகளையும் நிவாரணங்களையும் வழங்கியிருந்தார்.
தற்போதைய இக்கட்டான நிலையில் இவ்விடயங்களை பகிரங்கப்படுத்த கூடாது என முடிவு செய்திருந்தோம். எனினும், சமூக வளைத்தளங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், தான் சார்ந்த மாவட்ட மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என பல விமர்சனங்கள் முன்வைக்கப்டுகின்றமையால் இதனைப் பதிவிடுகிறோம்.
1. தோப்பூர் ACJU கொரோனா நிவாரண நிதியம் – ரூபா 100,000
2. புல்மோட்டை ACMC மத்திய குழு – கொரோனா நிவாரண நிதியம் – ரூபா 100,000
3.கிண்ணியா ACJU கொரோனா நிவாரண நிதியம் – ரூபா 100,000
மக்களுக்கான நற்பணிகள் தொடர துஆ செய்யுங்கள்.