வெடிப்பு ஏற்பட்ட அவிசாவளை – கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் சுற்றி உள்ள பகுதிகளை பார்வையிடுவதற்காக வருவதைத் தவிர்த்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
தற்போது பிரதேசவாசிகள் அதனை பார்வையிடுவதற்கு வருவதால் கடும் வாகன நெரிசலுடன் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த இந்த தீ பரவலின் பின்னர் அந்த பிரதேசத்தை சுற்றிவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட கலவரமான நிலையுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 என்ற ஹெலிகொப்டர் இன்று காலை குறித்த இராணு முகாமை சுற்றி உள்ள பிரதேசங்களை கண்காணித்ததாக இராணுவ பேச்சாளர், பிரிகேடியர் ஜயந்த ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், வெடிப்புக்குள்ளான களஞ்சியசாலை பகுதிக்கு பாதுகாப்பு பிரிவு நுழைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பிரதேசத்தில் உள்ள கிணற்று நீரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
வெடிப்பு காரணமாக வெளியில் பரவிய நச்சு பொருட்கள் நீரில் கலந்திருந்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.